தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன. தனியாக பிரிக்கப்பட்ட வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மும்பை ஐஐடி மற்றும் இந்திய ரயில்வே ஆராய்ச்சியாளர்கள், ரயில்வேயின் செயல்திறனை மேலும் அதிகரிக்க, வாரத்தின் சில நாட்களில் மட்டுமே இயக்கப்படும் ரயில்களை ஒரே குழுவாக இணைத்து, திட்டமிடலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்