பரந்து விரிந்த இந்தியா தீபகற்பத்தின் மேற்குப் பரப்பில், அழகிய மலைத் தொடர்களின் அணிவகுப்பாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகின் பல்லுயிரியற் காடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் அச்சுறுத்தப்பட்ட இனங்களில், சுமார் 325 உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகின்றன. அவற்றில் பல உயிரினங்கள் வேறெங்கும் காணப்படாது இந்த நிலவியல் அமைப்புக்கு மட்டுமே உரித்தான அகணிய உயிரிகளாகும் (Endemic organisms). அகணிய உயிர்கள், உட்பிரதேசத்திற்குரிய உயிரி என்றும் அழைக்கப்படுகிறது.
மும்பை ஐஐடி மற்றும் இந்திய ரயில்வே ஆராய்ச்சியாளர்கள், ரயில்வேயின் செயல்திறனை மேலும் அதிகரிக்க, வாரத்தின் சில நாட்களில் மட்டுமே இயக்கப்படும் ரயில்களை ஒரே குழுவாக இணைத்து, திட்டமிடலில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்