ஓங்கி உயர்ந்த மலைகளிற்கிடையே, பரந்து விரிந்த புல்வெளிகளால் நிரம்பிய ஒரு வனப்பகுதி! இந்த வர்ணனை, திரைப்படங்களில் வரும் ரம்மியமான ஒரு காதல் பாடலை படமாக்க சிறந்த இடம் போல தோன்றலாம். ஆனால், புல்வெளிகளுடன் கூடிய இதுபோன்ற ரம்மியமான நிலப்பரப்புகள் மலை உச்சிகளில் அமைந்திருப்பதை சங்கப்புலவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆவணப்படுத்தியதோடு தங்களின் இலக்கியங்களில் உவமைகளாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
“மூங்கா வெருகெலி மூவரி யணிலொ
டாங்கவை நான்குங் குட்டிக் குரிய..”
550 (பொருளதிகாரம் - மரபியல்)
“ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்ற…”
-326- பருத்திப் பெண்டின் சிறு தீ!
நமது பூமியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து நிலநடுக்கங்கள், 5.0 அல்லது அதற்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் நிகழ்கின்றன. நிலநடுக்கங்கள் அவற்றின் மூலமாக மட்டுமல்லாமல் சுனாமி போன்ற நிலநடுக்கத்திற்க்கு தொடர்புடைய சில இயற்கை பேரிடர்களால் பேரழிவினை உண்டாக்குகின்றன. பொதுவாக நிலநடுக்கத்தால் உண்டாகும் சேதம் என்பது அதன் தீவிரம் மற்றும் அதன் மையப்பகுதியிலிருந்து நிலநடுக்கம் உண்டாகும் நிலப்பரப்பின் தூரத்தினைப் பொறுத்தது.
வலி என்பது உடலில் ஏற்படும் வேதனையளிக்கும் உணர்வு. நமது தினசரி அலுவல்களில் வலிகள் தவிர்க்க முடியாதவை. சிறு காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் வலிகளானது சில மணித்துளிகள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கக்கூடியவை. சிகிச்சைகளின் காலம் முடிந்தாலும், சில நேரங்களில் வலிகள் நாட்பட்ட வலிகளாக பல ஆண்டுகள் கூட நீடிப்பதுண்டு. இந்த நாட்பட்ட வலிகள் என்பவை மிகவும் துயர் நிறைந்தவை.
கடந்த 2019 பிப்ரவரி மாதம், மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை ஓநாய் ஒன்று தாக்கியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதைப் போல், பக்கத்து கிராமத்தில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஒரு ஓநாய் தாக்கியதையும், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதையும் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இதுபோன்ற ஓநாய் தாக்குதல் சம்பவங்கள், வயல்களில் வேலை செய்யும் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியன.
ஈரல் அழற்சி (Hepatitis) சி என்பது ஒருவகை தொற்றுநோய். இது ஹெப்பாடிட்டீஸ் சி எனும் ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினால் (virus) உண்டாக்கப்படுகின்றது. இந்த நச்சுநுண்மம் ரத்தத்தின் மூலமாக பரவுகின்றது. நரம்பு மருந்திற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் ரத்த தானத்தின் போது பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினால் இந்த நச்சுநுண்மம் பரவக்கூடும். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தெரியலாம்.
தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன. தனியாக பிரிக்கப்பட்ட வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)
என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார் திரிக்கூடராசப்பக்கவிராயர்.
“முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி…….”,
169 - நற்றிணை